எங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.

Monday, December 4, 2017

ஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -



கொடுக்கப்பட்ட "எண்ணெய் அன்பு" -   ஐந்தாம் கருவுக்கு முதல் கதை.

=============================================================================================

விமானத்தில் ஆரம்பித்து பாட்டி வடை சுட்டுக் கொடுக்கும் செண்டி மெண்டல் விளம்பரம். Fueled Love.

  BA  பிசினஸ் வகுப்பில் மிக நன்றாக இருக்கும்.  அதான் பாட்டியுடைய மகன்  இந்தியாவுக்கு இந்த வகுப்பில் பறக்க ஏற்பாடு செய்கிறான்.  தனியாக வரும் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் பிரிவுத்துயர், இன்னோரு மகனைப் பார்க்கப் போகும் ஆவல் எல்லாமே உண்மைதான்.
அழகாக எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் மிகையானது தான்.  ஆனால் விளம்பரம் அப்படித்தானே இருக்கும். நன்றியும் வாழ்த்துகளும்  எங்கள் ப்ளாக்   குழுமத்துக்கு.


இனி கதை.  



ஆகாயத்தில் ஆரம்பம்..
வல்லிசிம்ஹன் 
++++++++++++++++++++++++++++



ஞானம் , பெட்டியைத் தயார் செய்கையிலியே, சென்னையிலிருக்கும்
பேரன், பேத்திக்கு  வாங்கிய உடைகள், மருமகளுக்கு  வாங்கிய  பச்சை ப்ரேஸ்லெட், மகனுக்கு வாங்கிய புது ஐபாட் என்று அழகாகக், கலர் வண்ணத்தாள்களில் சுற்றி  மென்மையான கைகளால் அடுக்கிவைத்தார்.


பின்னால் வந்து பார்த்த சின்ன மகன் கணேஷ், "போதுமாம்மா, இன்னும் குக்கீஸ்,  சாக்கலேட் என்று வாங்கிக் கொள்கிறாயா?    தார்ண்டன் சாக்லேட் யம்மியாக  இருக்கும்.  மாகிண்டாஷ் வாங்கிண்டு போறியா?" என்றெல்லாம் பேசிக்கொண்டே வந்தான்.

மகனை அன்புடன் அணைத்த ஞானம் , "டேய் போறுண்டா...   ஒழுங்கா சாப்பிடு.  சில்லுனு குளிர் ஆரம்பித்தாச்சு.  ஹீட்டர் சரியா வேலை செய்யலைன்னு நினைவு வச்சிக்கோ. லாண்ட்லார்ட் கிட்டே உடனே பேசு.  லண்டன் குளிர் மோசமானது. அனாவசியமா சளித்தொல்லை வரவழைத்துக் கொள்ளாதே"

 இன்ன பிற பலகாரங்கள்,  எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாச்சு.

"அம்மா உனக்கு எப்ப வரணும்னு சொல்லு  திரும்பி வந்துடு"  என்னும் மகனை ஆழ்ந்து பார்த்தாள் ஞானம்.

"உனக்கு ஒரு மனைவி வரட்டும்டா. அப்புறம் வரேன்.  தனியா உன்னை விட்டுப் போவதில் ரொம்ப வருத்தமாக இருக்குடா.  யாரை வேணுனாலும் திருமணம் செய்துக்கோ.  எனக்கு  மறுப்பே கிடையாது. மனப் பொருத்தம் போதும்."


"அம்மா..."  என்று அணைத்துக் கொண்டவன் கண்ணிலும் நீர்.

அடுத்த நாள் ஹீத்ரோ , பகல் 12 மணிக்கு  வந்தாச்சு. ஞானம் இரவு விழித்து மகனுக்குப் பிடித்த உணவுகளைத் தயார் செய்து Fridjedair வைத்திருந்தாள்.


செக்கின் செய்து லௌஞ்சில் அமர்ந்தார்கள்.  அம்மாவுக்குப் பிடித்த நல்ல காப்பியை வாங்கிக் கொடுத்தான்.  அம்மாவிடம் எல்லா உணவுப்பொட்டலங்களுக்கும் நன்றி சொன்னான்.

கையசைத்து பிசினஸ் வகுப்பு பயணிகளுடன் சேர்ந்து கொண்டாள்.  விமானம் கிளம்பியதும் ஆயாசம் மனதைக் கவ்வியது.   "ஏதாவது சூடான பானம் வேண்டுமா?"  என்று கேட்ட பெண்குரல் அவளை எழுப்பியது.


 'என்ன அழகான  பெண். எத்தனை மரியாதை. .?'   இன்னும் ஊன்றி கவனித்தாள்.  இந்தியக் களை தெரிகிறதே.   நிலம் பெயர்ந்து குடியேறிய வம்சமோ...?'


 "நன்றி"  என்று புன்னகையோடு அவளது உபசரிப்பை ஏற்றுக் கொண்டாள்.  கையில் கொண்டு வந்த புத்தகத்தைப் பிரித்தவுடன், மகன் நினைவுதான்.  திரும்பிப் போயிருப்பான்  தன் வீட்டுக்கு.


 மீண்டும்  சாப்பாடு பற்றிய குறிப்புகளோடு வந்த பெண்ணின் பெயரைக் கவனித்தாள்.

பரிபூர்ணா அனந்தன்.

 தனக்கு வேண்டும் மெனுவைச் சொல்லிவிட்டுக் காத்திருக்கும் வேளையில் சென்னைக்குச் சென்று செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்துக் கொண்டாள்.  சாப்பிட்டுப் படுத்ததுதான் தெரியும்.


திடீரென்று ப்ளேன்  ஏர் பாக்கெட்டில் விழுந்து எழுந்ததில் விழித்தாள்.  அந்தப் பெண் வந்து சீட் பெல்ட் போட்டுக் கொள்ளச் சொல்லி,  "அட்லாண்டிக் காற்று வேகம் அதிகம் அம்மா.  பொறுத்துக் கொள்ளூங்கள்" என்று சொல்லும்போதே விமானம் மீண்டும் குலுங்கியது.

நிலை குலைந்த ஞானம் பக்கத்து தடுப்பில் மோதியதில் தலையில் சிறிய அடியும் கீறலும்.

பதறிப் போன  பூர்ணா, உடனே பக்கத்தில் உட்கார்ந்து, ஞானத்தை அணைத்துக் கொண்டு முதல் சிகித்சை செய்தாள்.

"ஏன்மா இவ்வளவு அக்கறையோடு செயல் படுகிறாயே...    அடிக்கடி இது போல ஆகுமா?"  என்றவளுக்கு முதல் தடவையாக்த் தமிழில் பதில் சொன்னாள் அந்தப் பெண்.  

"என் அம்மா உங்களை மாதிரியே இருப்பார் மேம்.   எனக்குதான் கொடுத்து வைக்கவில்லை"

 மனம் கசிந்தது ஞானத்துக்கு.

சென்னையில் முடிந்திருக்க வேண்டிய மகேஷின் திருமணத்தை நினைத்தாள்.  எல்லாப் பொருத்தமும் இருந்து நிச்சயம் செய்யும்  நாள் வரும்போது அந்தப் பெண் லண்டன் வர மறுத்துவிட்டது.   மென்மையான 
மகேஷ் சஞ்சலம் அடைந்துவிட்டான்.  அம்மாவை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து வந்துவிட்டான்..  முகத்தில் சிரிப்பைப் பார்ப்பதே அதிசயமாகிவிட்டது.....

அந்தப் பெண் அளித்த வலி மாத்திரை எடுத்துக் கொண்டு உறங்கி விட்டாள்.


சென்னை இறங்கும் நேரமும் வந்தது.   தலையில் அடிபட்ட வலியில் , உடல் தன் வசமில்லாதது போல உணர்ந்த ஞானம் தனக்கு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டாள்.

 சட் சடென்று ஏற்பாடுகள் நடக்க பூர்ணாவின் துணையோடு சென்னை நிலையத்தில் தன் மகன் சங்கரிடம் வந்து சேர்ந்தாள்.  சங்கரின் நன்றியை அழகாக ஏற்றுக்கொண்டாள் பூர்ணா.



 விடைபெற வந்த பூர்ணாவிடம் லண்டன் முகவரி வாங்கிக் கொண்டாள்.  தன் மகன் மகேஷின் ஈமெயில் ஐடியும் கொடுத்து  தன்னுடைய  மீள் வருகையின் போது  வந்து பார்ப்பதாகச் சொல்லி விடை பெற்றாள்.

வீட்டுக்கு வந்து குழந்தைகளுடன் கொஞ்சி, மருமகள் சமையலை அனுபவித்து அயர்ந்து உறங்கி விட்டாள்.  மகேஷ் நினைவு வந்ததும், ஃபேஸ் டைமில் அவனை அழைத்து தன் பிரயாண விவரத்தை சொல்லும்போது பூரணா நினைவு வர,  அந்த அன்பை மிக மெச்சி அவனிடம் சொன்னாள்.

 "அது அவர்கள் கடமை  அம்மா.  அந்தப் பெண்ணுக்கு எழுது" என்று வேறு பேச்சு ஆரம்பித்தான்.

 ஞானம் மனம் சுறுப்பாகச் செயல் பட்டது.

இது நிறைவேறினால் முதல்  காணிக்கை லண்டன் வினாயகருக்குத் தான் என்று முடி போட்டாள்.

அவர் காதில் விழுந்து விட்டது போலிருக்கிறது.

மகனிடம் இருந்து ஃபோன் கால். "அம்மா ப்ரிடிஷ் ஏர்வெசில் நீ  நழுவவிட்ட பார்சல் எனக்கு அனுப்பப் படுவதாக ஒரு பெண் சொன்னார். நீ அதைப் பார்க்கவில்லையா?" என்றான்.

"ஆஹா ,கைப்பையில் வைத்திருந்த பச்சை ப்ரேஸ்லெட்டா அது?
நான் திண்டாடிக் கொண்டிருந்தேன்"

"கவலைப் படதேம்மா பத்திரமாக வந்துவிடும்"

 ப்ரேஸ்லெட்டும், அதைக் கொண்டு வந்து கொடுத்த தமிழ்ப் பெண்ணும்
மகேஷுக்குப் பிடித்தது  இன்னோரு விஷயம்.   அவன் அவர்கள் வீட்டிற்கு விருந்துக்குப் போனது அடுத்த நடப்பு.

சென்னை வந்த ஒரே மாதத்தில், ஞானம் லண்டனுக்குக் கிளம்பினாள்.  அதே ப்ரிடிஷ் ஏர்வேய்ஸ்.

பயணம் இனிதாக அமைந்தது.

வரவேற்க வந்திருந்த பரிபூரணாவையும், மகேஷ்  மற்றும் சம்பந்தி ஆகப் போகும் அனந்தன்.  கண்களால் அணைத்துக் கொண்டாள்.

 எளிதாக, இனிதாக வினாயகர் முன்னிலையில் ,அண்ணா குடும்பம், அனந்தன் உறவினர்களுடன் அமோகமாகத்  திருமணம் நடந்தேறியது. .  புது மருமகளுக்கும் பச்சை ப்ரேஸ்லெட் செட் வாங்க மறக்கவில்லை ஞானம்.

51 comments:

 1. கதை அந்த விளம்பரத்தைப் போலவே நெகிழ்ச்சியாக உள்ளது அம்மா.. பறக்கும் பாவை மணமகள் ஆனாள்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஸ்ரீராம். கொஞ்சம் திருப்புமுனைகளோடு
   அமைக்கணுமோ தெரியாது. மனதில் இருந்ததை அப்படியே எழுதிவிட்டேன். உடனே
   வெளியிட்டதற்கு நன்றி.

   Delete
 2. நன்று..
  வானில் நிகழ்ந்த வர்ண ஜாலம் போல அழகு.. அழகு...

  ReplyDelete
  Replies
  1. சில சமயம் கனவுகள் நிஜமாவது உண்டு அன்பு துரை.
   ரசித்து வார்த்தைகள் சொன்னதற்கு மிகவும் நன்றி.
   வாழ்க வளமுடன்.

   Delete
 3. அருமையான கதை! நினைத்தது நடந்தது! விநாயகர் அருளால்!

  ReplyDelete
  Replies
  1. அன்பு கீதாமா, கொஞ்சம் உப்பு காரம் சேர்த்திருக்கணுமோ.
   என்றும் இந்தப் பிள்ளையார் இல்லாமல் ஏதாவது நடக்குமா.
   அதுவும் லண்டன் வினாயகர் இன்னும் மனசிலியே இருக்கிறார்.
   பெரிய மகனுக்கு அவரிடம் அத்தனை பிரியம். தவறாமல் சென்று வருவான். நன்றி மா.

   Delete
 4. கதை சுபமாகியதில் மகிழ்ச்சி.
  பிள்ளையாரின் அருளால் பிள்ளைக்கு பெண் கிடைத்தாள்.

  ReplyDelete
  Replies
  1. மிக மிக உண்மை. கல்யாண வினாயகர். மிக நன்றி கில்லர் ஜி.

   Delete
 5. சுபமான கதை. பாராட்டுக்கள். இப்படியெல்லாம் ஸ்மூத்தா நடக்குமா? நடந்தால் நல்லாத்தான் இருக்கும்.

  "எனக்கு மறுப்பே கிடையாது. மனப் பொருத்தம் போதும்" - இதுவும் வித்தியாசமான சிந்தனைதான்.

  "செக்கின் செய்து லௌஞ்சில் அமர்ந்தார்கள்." - செக்கின் செய்தபின்பு, கூட வரும் மகன் எப்படி லௌஞ்சிற்கு வரமுடியும்?

  ReplyDelete
  Replies
  1. நெல்லை எனக்கும் அந்தக் கேள்வி எழுந்தது செக்கின் செய்த பிறகு....எப்படி என்று. ஒரு வேளை பிஸினஸ் க்ளாஸ் என்றால் ஏதேனும் இப்படி இருக்குமோ என்று தோன்றியது....

   கீதா

   Delete
  2. அன்பு நெல்லைத்தமிழன்,
   அது என் தப்பு மா. எந்தப் பிரயாணமும்
   இவருடனோ ,இல்லை குழந்தைகளுடனோ தான் அமையும்.. அந்த நினைப்பில்
   எழுதிவிட்டேன்.

   மற்றபடி கதை உங்களுக்குப் பிடித்தது என்று நம்புகிறேன். நான் இரண்டு தடவை
   பிசினஸ் வகுப்பில் வர சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வளவாக ரசிக்கவில்லை.
   அதுவும்
   கதை எழுத உபயோகப்பட்டது.
   எத்தனை கவனமாகப் படிக்கிறீர்கள் என்பது
   ஆச்சர்யமாக இருக்கிறது.

   Delete
  3. அன்பு கீதா. அதெல்லாம் உட்கார அனேகமாக
   விடுவதில்லை. நானும் சின்ன மகனும் எமிரெட்சில்
   போகும்போது,
   உடல் நலம் சரியில்லாததால்
   அவன் கூட இருந்து விட்டு, எகானமிக்குப் போய் விட்டான்.

   Delete
  4. ஓ ஓகே வல்லிம்மா...

   கீதா

   Delete
 6. வாவ்! வல்லிம்மா....சூப்பர் கதை! சுபம்!! வல்லிம்மாவின் மனதைப் போலவே!!! வாழ்த்துகள் பாராட்டுகள் வல்லிமா...
  மனப்பொருத்தம் போதும்// யெஸ் வல்லிம்மா என் கருத்தும் அதே.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அன்பு கீதா, நம் குழந்தைகள் வயதுக்கு வந்து, துணையில்லாமல்
   பார்க்க மனம் மிகக் கஷ்டப்படும் இல்லையாமா.
   நம் கடமை சரியாக முடியாதது போல உறுத்தும்,
   பிறகு வாழ்வு அமைத்துக் கொள்வது அவர்கள் விருப்பம்.
   மனப் பொருத்தம் இல்லாமல் எந்தத் திருமணம் அமைவதும்
   சரிப்படுவதில்லை. கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.

   Delete
  2. எஸ் எஸ் ...மனப் பொருத்தம் இல்லைனா.....வேறு எத்தனைப் பொருத்தம் இருந்தாலும்.....வாழ்க்கை ஏதோ ஓடும்...அவ்வளவே.....

   கீதா

   Delete
 7. வாவ்வ் !! அன்பான வல்லிமாகிட்டருந்து அழகான அன்பு பொழியும் கதை ..
  ரொம்ப பிடிச்சிருந்தது . எனக்கு ஞானம் அம்மாவின் செய்கைகள் பேச்சு குணம் அப்படியே வல்லிமாவை தான் கண்முன்னே நிறுத்தியது ..நான்தான் லண்டனில் உங்களை பார்க்க முடியாமப்போனாலும் உங்க ஸ்வீட் குரலை கேட்டிருக்கேனே :)

  உலகம் உலகத்து மக்கள் எல்லாருமே இதுமாதிரி அன்பாவே இருந்துட்டா எந்த நெகட்டிவிட்டியும் துளியும் எட்டிப்பாக்காம (கொஞ்சம் ஓவர் ஆசைதான் ) இப்படி அமைந்தா எவ்ளோ நல்லா இருக்குமில்லை

  ReplyDelete
  Replies
  1. யெஸ் ஏஞ்சல் வல்லிம்மா அப்படியே பிரதிபலிப்பு இதில...நம்ப மாட்டீங்க அன்னிக்கு வீடியோ பார்த்ததும் அந்தப் பாட்டியைப் பார்த்ததும் உடன் இருவர் என் மனதில் வந்தாங்க ஒன்னு வல்லிம்மா இன்னொனு காமாட்சியம்மா. அண்ட் என் கதையிலும் இந்த இருவரின் பெயர் டக்கென்று வந்து காமாட்சிவல்லினு எழுதியும் விட்டேன். அப்புறம் வேண்டாம்....என்று பெயரை மாற்றிவிட்டேன்...

   கீதா

   Delete
  2. அன்பு ஏஞ்சல், நாம் சந்திக்க முடியாமல் போனது வருத்தமே. உங்கள் எல்லோரின் அன்பு தான்
   என்னை இந்த அளவில் வைத்திருக்கிறது.
   நம் வரை எல்லோரிடமும் அன்பு காட்டலாம்.
   உலகம் தானாக மாறட்டும். இறைவன் பார்த்துக் கொள்வார்.
   நன்றி கண்ணா.

   Delete
  3. ஆமா கீதா :) இவங்க இருவருடன் சொந்த மகள் மாதிரி பழகி விட்டேன் நேரில் சந்திக்கலைன்னாலும் நெருக்கமான உணர்வு வரும் அவங்க இருவரின் பின்னூட்டங்கள் படிக்கும்போது

   Delete
  4. Love you vallimaa .sending bear hugs from london .keep smiling always

   Delete
  5. Yes da Kannammaa. Love and hugs and kisses to you , Sharon and Jessie.

   Delete
  6. துளசி அக்கா கீதாக்கா ப்ரண்டு மாதிரி :) கோமதி அக்கா OWN அக்கா மாதிரி இப்படி ஒவ்வொருவருடனும் ஒவ்வொருவித நட்புறவு

   Delete
  7. யெஸ் யெஸ் ஏஞ்சல்! ஸேம் உணர்வுகள் எனக்கும். ஏதோ நெருங்கிய சொந்தம் போல்...அதில் நீங்களும், பூஸாரும் உண்டு...அதே போல் பாய்ஸும்!!!!!!!(மென் இல்ல பாய்ஸ்!!!!!!ஹா ஹா ஹா)

   கீதா

   Delete
 8. கதை கருவுக்கு காணொளி கொடுத்ததும் எப்படி ஆரம்பிக்கிறததுன்னு யோசிச்சிட்டிருந்தேன் ..அழகா துவக்கத்தை எடுத்து கொடுத்த வல்லிமாக்கு தாங்க்ஸ் :)

  ReplyDelete
  Replies
  1. ஏஞ்சல் நானும் எழுதத் தொடங்கிட்டேன்.கரு மனதில் இருக்கு....ஆனா ஏனோ ஃப்ளோ இல்லை...இப்ப வல்லிமாவுடையது பார்த்ததும் எழுதிடணும்னு தோணுது.....சரி ரொம்ப சொல்லலை...ஹா ஹா ஹா ...

   கீதா

   Delete
  2. இன்னொன்னு என்னன்னா இப்படி எழுதி எழுதி முடித்தோ இல்லைனா பாதிலயஓ விட்டு வைச்சு எழுதாம ஏதோ ஒரு சுணக்கம்.... அப்புறம் கிட்டத்தட்ட அதே மாதிரி யாராவது எழுதியிருப்பாங்க உடனே அதை அப்படியே டெலிட் பண்ணிருவேன் இல்லைனா கிடப்பில போட்டுருவேன்...அதுக்குனு ஒரு ஃபோல்டரே வைச்சுருக்கேன் ஹா ஹா ஹா ஹா...

   கீதா

   Delete
  3. நான் அதனால்தான் மனதில் கரு தோணுச்சுன்னா உடனடியா எழுதி முடிச்சி ஸ்பெல்லிங் மிஸ்டேக் லாஜிக்கலாம் கூட பாக்காம அனுப்பி விட்ருவேன் :) பாவம் ஸ்ரீராம்தான் புள்ளி இடைவெளி எல்லாத்தையும் சரி பார்த்து பதிவை பப்லிஷ் பண்ணுவார் :)

   Delete
 9. இனிய மாலை வணக்கம் அனைவருக்கும்.
  கையில் காப்பியுடன் கதையை படித்தாகிறது. பின்னூட்டங்கள்
  அழகாகக் கருத்துடன் வந்திருக்கின்றன. நன்றி.ஸ்ரீராம், எங்கள் ப்ளாக், நம்ம ஏரியா. அந்தப் படத்தைப் போட்டது
  அழகா இருக்கு. ஸச் அ ஸ்வீட் லேடி.

  வாழ்வில் நடந்த சம்பவங்கள் கதை எழுத அஸ்திவாரம் போடுகின்றன. அதே போல
  வினாயகரும் எப்போதும் உறுதுணை.
  நிச்சயமான திருமணத்தை வெளி நாடு என்று மறுப்புச் சொல்லிவிட்டார்
  ஒரு பெண். தாண்டி வர வடிகாலாக இந்தக் கதை பயன் பட்டது.
  அனேக நன்றிகளும் வாழ்த்துகளும், நம்ம ஏரியா.^ ஸ்ரீராம்..

  ReplyDelete
 10. அனைவரும் எழுத ,அந்தக் கதைகளின் களங்களைப் படிக்க ஆவலாயிருக்கு. .
  அன்பு ஏஞ்சல் ,கீதா இருவரும் அருமையாக எழுதுவீர்கள் என்று
  காத்திருக்கிறேன். வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. ஆவ்வ்வ்வ்வ் ஒரே நாள்ல எல்லாப் பக்கமும் என்னை ஓட வைக்கினமே வைரவா:) இந்த சுவீட் 16 ல எப்படித்தான் எல்லாத்தையும் சமாளிக்கப் போறேனோ.... வல்லிம்மா.. நான் மெதுவா வந்து கதை படிச்சு கொமெண்ட் போடுறேன்...

  ReplyDelete
  Replies
  1. மெதுவே வாருங்கள் அதிரா. வடை சாப்பிட்டு பூரித்தேன்.

   Delete
 12. இது போல் உண்மையான சம்பவம் ஒன்று நடந்த தாக கேள்வி பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. அசோகன் குப்புசாமி, நிஜமா நடந்ததா. என்ன அதிசயம்,
   ஏர்ஹோஸ்டஸ் சினிமா நடிகை ஆன கதை தெரியும். மணமகளானது உண்மையாவே சந்தோஷமாக இருக்கிறது. மிக நன்றி.

   Delete
 13. நெகிழ்ச்சியான சம்பவங்கள் உங்கள் கதையிலும் அருமையான முடிவுடன் வாழ்த்துக்கள் மா ......

  ReplyDelete
  Replies
  1. அன்பு பூ விழி,
   நமக்குப் பிடித்த விஷயம் குடும்பமும் அதன் சந்தோஷமும் தான் இல்லையா.
   இந்தக் கதை லட்டு மாதிரிக் கிடைத்ததற்குக் காரணம் அந்த வீடியோ தான். நன்றி ஸ்ரீராமுக்கு.

   Delete
 14. வல்லி அக்கா கதை மிக அருமையாக இருக்கிறது.
  முதலில் படிக்கும் போதே முடிவு இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன், அது போலவே அமைந்து விட்டது நிறைவு. மனதுக்கு மகிழ்ச்சி.
  மனபொருத்தம் இருந்தால் போதும்.
  வாழ்த்துக்கள் அக்கா.

  ReplyDelete
  Replies
  1. நம் எண்ணங்கள் ஒத்திருப்பதால் கதையும் எதிர்பார்த்தது
   போலவே அமைகின்றன அன்பு கோமதி. படித்து நல்ல கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா.

   Delete
 15. ஆஆஆவ்வ்வ்வ் முதலில், உடனேயே சுடச்சுட முதலாவதாக கதை எழுதிய வல்லிம்மாவுக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள். மிக அருமையாக சோட் அண்ட் சுவீட்டாக முடித்த விதம் மிக அருமை.... கருவுக்குத் தந்த அட் வீடியோவை வைத்தே புகுந்து விளையாடிக் கதை எழுதி முடிச்சிட்டீங்க .

  அந்த பிளைட்டில் ஏறி இருந்தவுடன்.. மகன் இப்போ வீட்டுக்குப் போயிருப்பானோ என நினைத்த விதம்.. மனதை என்னமோ பண்ணியது.. உண்மைதான்... எங்குமே பிரயாணம் என்பது போகும்போது மகிழ்ச்சி.. திரும்பி வரும்போது கொடுமை:(...

  மிக அருமையான முடிவு.

  ReplyDelete
  Replies
  1. அன்பு ஆதிரா,
   எல்லாப் பயணங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நான்கு

   வருடங்களாக விமானங்களில் ஏறுவதும் இறங்குவதும்தான்.
   ஒரு வீட்டை விட்டுப் போகும்போது அந்த வீட்டைப் பற்றி
   நினைப்பு. மீண்டும் இன்னோரு இடம். அங்கெ உள்ள குழந்தைகள்
   பனி, வெப்பம். ஒட்டுதல் மீண்டும் தூக்கு பெட்டியை.
   உங்களின் நுண்ணிய பார்வை வியக்க வைக்கிறது.
   எல்லா அம்மாக்களுக்கும் உண்டானதுதான் அந்த சோகம்.
   மிக நன்றி மா. கடமைப் பட்டிருக்கிறேன் உங்கள் எல்லோரின் அன்புக்கும்.

   Delete
 16. வாவ்... இப்படி அன்பு சூழ இருந்துவிட்டால் எவ்வளவு நலம்.

  நல்ல கதைம்மா. விளம்பரம் எனக்கும் பிடித்த விளம்பரம்.

  ReplyDelete
  Replies
  1. அன்பு வெங்கட், நீங்களும் வந்து படித்தது சந்தோஷம்.
   ஒரு ஃபீல் குட் ,கதை எழுத எனக்கு சந்தர்ப்பம் கொடுத்த ஸ்ரீராம்க்கு தான்
   நன்றி சொல்லணும். . ஆதியையும் எழுதச் சொல்லுங்கோ.
   நன்றாக எழுதக் கூடியவர். வாழ்க வளமுடன் மா.

   Delete
 17. ரொம்ப அன்பான கதை அம்மா...

  படிக்கும்போதே மனதிற்கு ஒரு இதம் வருகிறது...

  ReplyDelete
  Replies
  1. அன்பு பானு மா.,

   உங்களுக்கும் பிடித்ததா.
   சுருக்கமா எழுதணும்னு நினைத்தேன் நீண்டுவிட்டது.
   மிக மிக நன்றி மா.

   Delete
 18. ஆரம்பமே அமர்க்களமாய் அன்பான சுபமான முடிவுள்ள கதையை கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் மா (விட்டு போய்விட்டது:-))))

  ReplyDelete
  Replies
  1. அன்பு பூவிழி, அதனால் தான் உங்க எழுத்தெல்லாம் இன்னும்
   அதிகமா பரிமளிக்கணும். ஆரம்பம் மட்டும்தானே இது . ஆவலோடக் காத்திருக்கிறேன்.
   நன்றி மா.

   Delete
 19. வலலிம்மா அருமையானகதை. மனதுக்கு பிடித்தவர்களை பண்ணிக்கொள்ளச் சொன்னால் நம்மிடம் அன்பு மாறாது இருக்கும். நமக்கும் அவர்கள் பரிச்சயமானவர்கள் என்றால் அப்பீலே கிடையாது. ஒருவரைவிட்டு அடுத்த பிள்ளைகளிடம் சென்றாலும்,அந்தப் பிரயாண நேரம் மனம் அனுபவிக்கும் உணர்ச்சிகள் சொல்லி முடியாது. இது திரும்பவும் தொடர்ந்து கொண்டே அவ்விடமிருந்து பிரயாணிக்கும் நேரமும் இதே கதைதான். ஒண்ணே ஒண்ணுகண்ணே கண்ணென்றவர்களின் நிலையை நினைத்துக் கொள்வேன். இனிமையாகக் கதை முடிந்து விட்டது. எங்கிருந்தோ எங்கேயோ! பிராப்தம் என்று முன்பெல்லாம் சொல்வார்களில்லையா. அழகு. அன்புடன்.

  ReplyDelete
 20. தெள்ளிய நீரோட்டம் போன்ற கதை. பிரம்மச்சாரியான விநாயகர் எத்தனை திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார்? கதை முழுக்க விரவியிருக்கும் அன்பும், இனிமையும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிமா.

  ReplyDelete